இரட்டணை திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழா
திண்டிவனம் அடுத்த இரட்டணை திரௌபதி அம்மன் கோவில் அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம், அரவான் பலி நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த இரட்டணை திரௌபதி அம்மன் கோவிலில் 21ம் நாள் நிகழ்ச்சியாக நண்பகல் அரவான் பலி மற்றும் துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
மகாபாரதப் போரின் 18-ஆம் நாள் நிகழ்வு இது. போரின் இறுதியில் துரியோதனன் பீமனால் தொடை பிளக்கப்பட்டு வீழ்த்தப்பட்டான்.
முன்னதாக களிமண்ணால் துரியோதனனின் பிரம்மாண்டமான உருவம் செய்யப்பட்டு, 18-ஆம் நாள் போர் நிகழ்வுகள் மற்றும் அவனது இறுதிக்காலம் கூத்து கலைஞர்களால் பீமன் மற்றும் துரியோதனன் தத்ரூபமாக வேடமிட்டு, கதாயுதங்களுடன் சண்டையிடுவது போல நடித்துக் காட்டினர்.
இறுதியில், துரியோதனனின் தொடைப் பகுதியில் கிருஷ்ணரின் ஆலோசனையின்படி பீமன் துரியோதனனின் தொடையில் அடித்துக் கொன்றார்.
மேலும் துரியோதனனின் இரத்தம் பாண்டவர்களின் வெற்றியை உறுதி செய்தது.
இதன் பின்னர், துரியோதனனின் இரத்தத்தை திரௌபதியின் கூந்தலில் தடவி, அவளது கூந்தலை முடிக்கும் சபதம் நிறைவேறுதல் நடைபெற்றது.
இதில் ரெட்டணை சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

