in

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா

 

இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த விழா 17ஆம் நாள் விராட பருவம் – முத்துப் பல்லக்கு .

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் இரட்டணை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த விழா 17ஆம் நாளை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த மூலவர் திரௌபதியம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து உற்சவர்கள் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்ரீ அர்ஜுன மகாராஜா ஸ்ரீ திரௌபதி அம்மன் மற்றும் ஸ்ரீ சுபத்திரை ஆகிய தெய்வங்கள் மகாபாரதத்தில் பாண்டவர்கள் ஓராண்டு காலம் அஞ்ஞாதவாசம் மேற்கொண்ட நிகழ்வை மையமாகக் கொண்டதுதான் விராட பருவம்.

இந்நாளில், பாண்டவர்கள் விராட மன்னனின் அரண்மனையில் வெவ்வேறு வேடங்களில் பணிபுரிந்த கதைகள் விவரிக்கப்பட்டு, இறைவனின் திருவிளையாடல்கள் பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்ற காட்சியை வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூரத்தை ஆரத்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கு வாகனத்தில் இரவு வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாதம் தேய்பிறை பிரதோஷம்

குப்பை போல் கிடக்கும் தார்பாய்கள் – விவசாயிகள் அதிர்ச்சி