in

வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள கண்மாயை தூர்வாரி வண்டல் மண் எடுக்க அனுமதி வேண்டியும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர், எட்டையபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்மாய்கள் மழை காலங்களுக்கு முன்பு தூர்வார அனுமதி வேண்டியும் தூர்வாரும் வண்டல் மணலை விவசாயிகளுக்கு எடுக்க அனுமதி வழங்க வேண்டிய விவசாயிகள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுவரை எந்தவித நடவடிக்கையில் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து விளாத்திகுளம் வட்டம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கண்மாய் ஆற்றங்கரை பகுதி விவசாயிகள் இன்று ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்து விளாத்திகுளம் வட்டம் பகுதியில் உள்ள நீர் பாசன கண்மாய் மற்றும் ஆற்றங்கரை பகுதிகளில் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

மேலும் தூர்வாரும் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுக்க அனுமதி வழங்க வேண்டிய மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

What do you think?

குப்பை போல் கிடக்கும் தார்பாய்கள் – விவசாயிகள் அதிர்ச்சி

தஞ்சாவூர் பெரியகோயில் மஹாவாராஹி அம்ம ஆஷாட நவராத்திரி விழா