in

தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மன் சிறப்பு அபிஷேகம்

தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மன் சிறப்பு அபிஷேகம்

 

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மஹாவாராஹி அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

தஞ்சாவூர் பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோவிலில் மஹாகணபதி ஹோமத்துடன் கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது.

மூன்றாம் நாளான இன்று வராஹி அம்மனுக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் தேன் பஞ்சாமிர்தம் என பல்வேறு அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

இதற்கு முன்னர் சிறப்பு யாகம் செய்யப்பட்டு புனித நீரினை வராஹி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பத்து நாட்கள் நடைபெறும் ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று இனிப்பு அலங்காரத்தில் வராஹி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இதனைத் தொடர்ந்து பெரிய கோயில் வளாகத்தில் பரதநாட்டியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

What do you think?

பயிர் கடன் தள்ளுபடி வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்பாட்டம்

அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாதம் தேய்பிறை பிரதோஷம்