in

திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம்


Watch – YouTube Click

திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம்

 

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபடுவோம் என திருவாரூரில் திமுக கூட்டத்தில் தீர்மானம்

வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் திருவாரூரில் உள்ள திமுக நகர கட்சி அலுவலகத்தில் திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையமங்கலம் பாலு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டினை முதன்மை மாநிலம் திகழும் வகையில் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்த நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்.

மேலும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமை அறிவிக்கும் வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் தஞ்சை நாகை பாராளுமன்ற தேர்தலில் பரப்புரை கூட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாவட்ட செயல்வீரர் கூட்டத்தில் நகரச் செயலாளர் பிரகாஷ் ஒன்றிய செயலாளர் புலிவலம் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

போலீஸ் Constable பணிக்காக சன்னி லியோன் விண்ணப்பித்தரா? அதிர்ந்த போலீசார்

பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் தன்னார்வளர்கள் பங்கேற்ற ஓட்டம்