அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் ஆனி மாதம் தேய்பிறை பிரதோஷம்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் உள்ள தொண்டை நாட்டு சிவஸ்தலங்களில் ஒன்றானதும், புகழ் பெற்ற சைவ சமயக்குறவர்களால் பாடல் பெற்றதுமான அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் ஆனி மாதம் தேய்பிறை பிரதோஷத்தையொட்டி பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 15 வகையான சிறப்பு பொருட்களால் நந்தியம் பெருமானுக்கும் பிரதோஷ நாயகரான ஆட்சீஸ்வரருக்கும் இளங்கிளி அம்மனுக்கும் அபிஷேகமும் மலர்களால் சிறப்பாக அலங்காரமும் நடைபெற்றன.

அதன் பின்னர் சிவாச்சாரியார் வேத மந்திரங்களும் மற்றும் தமிழ் மந்திரங்களும் முழங்க மகாதீபார்த்தனை நடைபெற்றது.
இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தியம் பெருமானையும் மற்றும் சுவாமி அம்மனின் வழிபட்டு சென்றனர்.


