in

துரோபதி அம்மன் ஆலய ஜீர்ணதாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

துரோபதி அம்மன் ஆலய ஜீர்ணதாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

 

அச்சரப்பாக்கம் அடுத்த பெரியகயப்பாக்கம் கிராமத்தில் உள்ள அருள்மிகு துரோபதி அம்மன் ஆலய ஜீர்ணதாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் பெரியகயப்பாக்கம் கிராமத்தில் நூற்றாண்டுகள் பழமையான கிராம தேவதையான ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் உள்ளது.

இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயிலை புனரமைத்து சீரமைத்தனர். கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கோயில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு ஜூலை 1 ஆம் தேதி காலை விநாயகர் பூஜை உடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி மூன்று மூன்று கால பூஜைகள் நடைபெற்றன.

ஜூலை 2- தேதி விழா அன்று காலை மங்கல இசையுடன், வேதபாராயணம் மற்றும் நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா தீப ஆராதனைக்கு பின்னர் யாக குண்டத்தில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்த பின்னர்
கோயில் கோபுரத்தை வந்தடைந்த கும்பங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

 

அதன் பின்னர், திருக்கோயிலின் மூலவரான விநாயகர், கிருஷ்ணர், திரௌபதி அம்மனுக்கு மகாபிஷேகம் சிறப்பு அலங்காரமும், தீபாரதனையும் நடைபெற்றன.

விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திரௌபதி அம்மனை வழிபட்டு சென்றனர்.

What do you think?

சட்டசபையில் திமுக எம்எல்ஏக்கள் தர்ணா

கீழப்பனையூர் ஸ்ரீ வல்லப கணபதி ஸ்ரீ மன்மதேஸ்வரர் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய மகா கும்பாபிஷேகம்