நெய்வேலியில் 33-ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா – ஆலோசனை கூட்டம்
நெய்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலயத்தில்,33 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாக பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
குறிப்பாக, விநாயகர் சுவாமி வீதி உலா, திருவிளக்கு பூஜை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்தும், பக்தர்களுக்கு தேவையான0. ஏற்பாடுகள் செய்வது குறித்தும் விழா கமிட்டியினர் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும், விழாவையொட்டி நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
33-ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பக்தி சிறப்புடனும், பொதுமக்கள் பங்கேற்புடனும் வெகு விமரிசையாக நடத்த விழா கமிட்டி சார்பில் முடிவு செய்யப்பட்டது.

