in

பொன்மலை ஶ்ரீ நவ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

பொன்மலை ஶ்ரீ நவ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

 

தேய்பிறை அஷ்டமி: இரா.பட்டணம் பொன்மலை ஶ்ரீ நவ காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்…

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அருகே இரா.பட்டணம் பொன்மலையில் அமைந்துள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனமர் அருள்மிகு பொன்னேஸ்வரர் திருத்தலத்தில் உள்ள ஶ்ரீ நவ காலபைரவர் சன்னதியில், ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு விமரிசையாக நடைபெற்றது.

விழாவையொட்டி ஶ்ரீ நவ காலபைரவருக்கு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து பால், தயிர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது.

கயிலாய வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற அபிஷேகத்தைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் ஆன்மிக பைங்கொழுந்து டாக்டர் எஸ். குருவாயூரப்பன் கலந்து கொண்டு, வராஹி ஆலய கும்பாபிஷேகம் மற்றும் காலபைரவரின் மகிமை குறித்த சிறப்பு ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

இதனைத் தொடர்ந்து ஶ்ரீ நவ காலபைரவருக்கு புனுகு, கஸ்தூரி, மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கப்பட்டது.

இந்த சிறப்பு பூஜையில் உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

காவிரி கரைமீதுள்ள அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆடிமாத பரணி தீபம்

நாமக்கல் கொல்லிமலையில் ஆடி 18-ம் பெருக்கு திருவிழா