தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா மங்கல இசையுடன் கோலாகலமாக நடைபெற்றது.

வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் மாரியம்மன் எழுந்தருளி கோவில் குளத்தில் வலம் வந்தார்.
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நடைபெறும் தெப்ப திருவிழா 20 ஆம் தேதி இரவு நடைபெற்றது.
கரகம் தப்பாட்டம் மயிலாட்டம் இசையுடன் அம்மன் வீதி உலா வந்து கோவில் குளத்தில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

வானவேடிக்கை மங்கல இசையுடன் கோவில் குளத்தை மூன்று முறை20 வலம் வந்த தெப்பம் நிலையை அடைந்தது.
தெப்ப திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.


