அனைவரும் அரசியல் பேசலாம் அரசியல் பேசுவது தப்பில்லை
அனைவரும் அரசியல் பேசலாம் இளைஞர்கள் அரசியல் பேசுவது தப்பில்லை, இவங்க மட்டும் தான் அரசியல் பேசணும் அரசியல் பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது -மதுரையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேட்டி.
விவேக்சாரை ரொம்ப மிஸ் பண்றேன் – தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு – மதுரையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி பேட்டி
ஹிப் ஹாப் தமிழா ஆதி மீசைய முறுக்கு 2 திரைப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் மதுரையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
மீசையை முறுக்கு திரைப்படத்திற்கான ப்ரோமோசனுக்காக இன்று மதியம் ரசிகர்களை சந்தித்தோம்
மீசைய முறுக்கு 2 குடும்பத்துடன் சந்தோஷமாக பார்க்கக்கூடிய திரைப்படம்
மீசைய முறுக்கு கனவை தேடி ஓடும் ஒரு இளைஞர்கள் குறித்த படம்
மீசைய முறுக்கு 2 கனவை தேடி ஓடிய இளைஞர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த படம்.
12 பாடல்கள் உள்ளது பொழுதுபோக்கு படம் கண்டிப்பாக இந்தப் படம் பெரிய வெற்றியை பெரும்.
மீசைய முறுக்கு ஒன்றில் உள்ள கதாபாத்திரங்களும் மீசைய முறுக்கு 2 ல் இருக்கும் இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
பாகுபலி நான் தமிழ் படமாக தான் பார்க்கிறேன் தமிழில் தான் பார்த்தேன்
பாகுபலி 1 பாகுபலி 2 இரண்டு பாகங்களும் ஹிட் ஆனது தானே
பார்ட் 2 படங்கள் ஓடாது என்று சென்டிமென்ட் ஆக நான் பார்க்கவில்லை
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பப்பாளிபழமே , கோவிந்தம்மா உள்ளிட்டா படங்கள் படம் வெளியாவதற்கு முன்பே புகழ்பெற்று ரசிகர்களை கவர்ந்து உள்ளன
ஆக்சன் படத்தில் சண்டை காட்சிகள் இருக்கும் இது இசை சார்ந்த படம் என்பதால் 12 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. படமே பாடல்களுக்கும் தொடர்பு உடையது.

என் அப்பாவிற்கு நிகரானவர் விவேக் அவர் இல்லாததை நான் ரொம்ப மிஸ் பண்றேன்.
என் அப்பாவை நான் எப்படி பார்த்தேனோ அதுதான் மீசைய முறுக்கு ஒன்று படமாக வந்தது.
கெட்டவன் மணி என்ற youtuber ஐ இந்த படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்த தலைமுறைக்கு நான் சொல்ல வேண்டிய படமாக மீசைய முறுக்கு 2 உருவாகியுள்ளது , ஒரு மூன்று தலைமுறைகளுக்கான படம்
தாத்தா அப்பா மகன் ஆகியோர்களின் வாழ்க்கையை தொடர்புபடுத்தி பேசும் படம்
“உங்களுக்கு எப்ப கல்யாணம் என்ற கேள்விக்கு ”
எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைலாம் இருக்கு bro திருமணம் முடிவதற்கு முன் எங்களுக்கு உரிய வசதி இல்லை இப்போது கொஞ்சம் முன்னேறி உள்ளோம் என் மனைவிக்கு கேமரா முன்பு வெளியில் வருவது பிடிக்காது நாங்கள் எங்கள் பிரைவேசி வாழ்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளோம்.
எனக்கு இருக்கும் ஒரே ஆசை, எந்த ஒரு சமரசமும் இன்றி கலையை எடுத்துச் செல்ல வேண்டும்
நானே வாய்ப்பு உருவாக்கி நானே கொண்டு செல்ல வேண்டும்
இசை இயக்கம் நடனம் அனைத்தும் நானே செய்ய வேண்டும்
இந்த ஆண்டு முதல் முழுவதும் இசையை கவனம் செலுத்த உள்ளேன்.
பின்புலம் இல்லாமல் முன்னோக்கி செல்வது கடினமான சூழலில் நாங்களே எங்களுக்கு தேவையான வாய்ப்புகளை அமைத்துக் கொண்டோம்
என்னுடைய கலையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் அதுதான் எனது இலக்கு,
தமிழர்கள் இன்டர்நேஷனல் அளவில் பாடல்களை கேட்கிறார்கள்
அதனுடைய எல்லைகள் உடையும் பொழுது பாடல்களில் ஆங்கில கலப்பும் வருகிறது .
இந்த படத்தில் கூட தூய தமிழில் கலைவாணி என்ற தமிழ் பாட்டு உள்ளது வாழ்க்கையில் தோற்றாலும் ஜெயித்தாலும் மீசையை முறுக்கு
எனக்கு மதுரையில் தான் அதிக நண்பர்கள் உள்ளனர். மதுரக்காரர்களோடு ஈசியாக எனக்கு கனெக்ட் ஆகும் மதுரையை மையமாக வைத்து விரைவில் படம் செய்வோம்.
அனைவரும் அரசியல் பேசலாம் இளைஞர்கள் அரசியல் பேசுவது தப்பில்லை , இவங்க மட்டும் தான் அரசியல் பேசணும் அரசியல் பேசக்கூடாது என்றெல்லாம் இல்லை நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது என்றார்.

