in

மதுரையில் தென்னிந்தியாவின் முதல் Hydrus Microstent அறுவை சிகிச்சை வெற்றி  வாஸன் கண் மருத்துவமனை தகவல்

மதுரையில் தென்னிந்தியாவின் முதல் Hydrus Microstent அறுவை சிகிச்சை வெற்றி  வாஸன் கண் மருத்துவமனை தகவல்

கண்நீர் அழுத்த நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை: மதுரையில் தென்னிந்தியாவின் முதல் Hydrus Microstent அறுவை சிகிச்சை வெற்றி  வாஸன் கண் மருத்துவமனை தகவல்

குளுக்கோமா (கண்நீர் அழுத்த நோய்) பாதிப்பால் பார்வை இழக்கும் அபாயத்தை குறைக்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த Hydrus Microstent அறுவை சிகிச்சை தென்னிந்தியாவில் முதல்முறையாக மதுரை அண்ணாநகரில் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரையில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாஸன் கண் மருத்துவமனையின் Chief Operating Officer டாக்டர் கமல் பாபு, டாக்டர் கோமதி ரம்யா, டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

குளுக்கோமா என்பது ஆரம்ப நிலையில் பெரும்பாலும் எந்த அறிகுறியும் இல்லாமல் பார்வை நரம்பை பாதிக்கும் ஆபத்தான கண் நோயாகும். சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் நிரந்தர பார்வை இழப்பும் ஏற்படக்கூடும். இதனை கருத்தில் கொண்டு, உலகளவில் சிறந்த பலன்களை அளித்து வரும் Hydrus Microstent தொழில்நுட்பத்தை மதுரையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த சிகிச்சையில், கண்நீரின் இயற்கையான வெளியேற்றப் பாதையில் மிக நுண்ணிய Microstent பொருத்தப்படுகிறது. இதன் மூலம் கண்நீர் அழுத்தம் பாதுகாப்பாகவும் நீண்டகாலமாகவும் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும், நீண்டகாலமாக கண் சொட்டுமருந்துகளை பயன்படுத்த வேண்டிய தேவையும் பலருக்கு குறையும். இந்த சிகிச்சை குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்படுவதுடன், நோயாளி விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையிலும் உள்ளது.

மதுரை வாஸன் கண் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை சமீபத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை பெற்ற நோயாளி தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதுடன், சிகிச்சை எதிர்பார்த்த பலனை அளித்துள்ளது. மருத்துவர்களின் அனுபவம், துல்லியமான சிகிச்சை முறை மற்றும் நவீன மருத்துவ உபகரணங்களின் ஒருங்கிணைப்பே இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Hydrus Microstent சிகிச்சையின் முக்கிய அம்சங்களாக குறைந்த நேர அறுவை சிகிச்சை, அதிக பாதுகாப்பு, விரைவான குணமடைதல், நீண்டகால பலன் மற்றும் நீண்டகால சொட்டுமருந்து பயன்பாட்டிலிருந்து விடுபடும் வாய்ப்பு ஆகியவை உள்ளன என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு செல்லாமல், உலகத் தரம் வாய்ந்த குளுக்கோமா சிகிச்சையை இனி மதுரையிலேயே பெறும் வாய்ப்பு நோயாளிகளுக்கு கிடைத்துள்ளது. நவீன கண் சிகிச்சை தொழில்நுட்பங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்துவதன் மூலம் தென் மாவட்ட மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை வழங்குவதில் வாஸன் கண் மருத்துவமனை தொடர்ந்து முன்னணி வகிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

What do you think?

நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு நீதிமன்ற உத்தரவால் போலீஸ் நடவடிக்கை

“SAY YES TO LIFE, NO TO DRUGS” என மனித சங்கிலி