in

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டம்; 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் போராட்டம்; 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மறியல்; 100-க்கும் மேற்பட்டோர் கைது

சிதம்பரம்: நீட் (NEET) தேர்வை ரத்து செய்யக் கோரியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் மத்திய அரசை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் ஏற்பட்டதாகக் கூறப்படும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், கடலூர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை காலை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் சிலை அருகே காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆனால், போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். சிதம்பரம் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) தீ. பிரதீப் தலைமையிலான போலீசார், போராட்டம் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, மாணவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், மறியலில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டு, தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

What do you think?

நாமக்கல் ராசிபுரம் கல்லாகுளம் அண்ணாமலையார் ஆலயத்தில்சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா

நீட் போராட்டம் முடிவுக்கு வர புதுச்சேரியில் தனியாக பிரார்த்தனை