நாமக்கல் ராசிபுரம் கல்லாகுளம் அண்ணாமலையார் ஆலயத்தில்சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் சைவசமயநால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது
அண்ணாமலையார் கோவிலில் உள்ள நால்வர் சன்னதியில் உள்ள நால்வர்க்கும் பலவித வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிசேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில்மலர்கள் மற்றும் வில்வம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்ட பின் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் சுந்தரர் கோவில் உள் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபுராணம் பாடி வழிபட்டனர்


