in

ஸ்ரீ காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

ஸ்ரீ காளியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ ஞான வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயிலில் ஸ்ரீ ஞான வாராஹி அம்பாள் பீடம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆஷாட நவராத்திரி விழாவை ஒட்டி எட்டாவது நாளில் ஸ்ரீ ஞான வாராஹி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், தேன், கரும்பு சாறு உள்ளிட்ட நறுமணத் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது.

இவ்விழாவில் கோயில் அர்ச்சகர் கணேசன் தலைமையில் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஞான வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டது. இவ்விழாவில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று வாராகி அம்மனை வழிபட்டு சென்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

What do you think?

தத்தகிரி முருகன் கோவில் மகா வேள்வி மற்றும் சண்முக அர்ச்சனை

நாமக்கல் ராசிபுரம் கல்லாகுளம் அண்ணாமலையார் ஆலயத்தில்சுந்தரமூர்த்தி நாயனார் குருபூஜை விழா