in

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டையால் அடித்து உதைக்க வேண்டும்


Watch – YouTube Click

ஓட்டுக்கு காசு கொடுக்க வருபவனை கட்டையால் அடித்து உதைக்க வேண்டும்

 

புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி தேர்தல் பொதுக்கூட்டம் கடலூர் சாலை சிங்காரவேலர் சிலை அருகில் நடைபெறுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் என்ன வளர்ச்சி இருக்கிறது.. மதுபானம் மற்றும் சாராயம் அதிகமாக கிடைக்கும்..தென்மாநிலங்களுக்கு அதிகமாக மது சப்ளை செய்யும் மாநிலம் புதுச்சேரி என்றும் தமிழகத்தில் மதுபான கடைகளை மூடினால் புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்து குடிபார்கள் என கூறியவர் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி என்றும் கூறினார்.

ஊழல்-லஞ்சத்தை ஒழிப்பேன் என்பவன் ஏமாற்றுகிறான்.அவனிடம் பல ஆண்டுகளாய் ஓட்டு போட்டு ஏமாறுகிறீர்கள். காசு கொடுப்பவனை கட்டி வைத்து உதைக்க வேண்டும். முதலில் திருடியவன் திருடியதற்கும் அடுத்த திருடுவதற்கும் பணம் கொடுக்கிறான்.காசு கொடுப்பவனின் ரத்தம் சிந்தினால் நாடு தூய்மையாகும் என்றும் சீமான் பேசினார்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு தொண்டர், தலைவா I LOVE U…என கூற சீமான் ME TOO என்றார்…

தொடர்ந்து பேசிய அவர், மருத்துவர் தான் அறுவை சிகிச்சை செய்வான்..ஆனால்
புதுச்சேரியில் போதையில் மருத்துவரை கழுத்தை அறுக்கிறான். அந்த அளவிற்கு போதை பொருட்கள் புதுச்சேரியில் கிடைக்கின்றன என கூறிய சீமான், தமிழை வளருங்கள் என்றால் குவாட்டர் பாட்டிலில் வீரன் என்று பெயர் வைத்து வளர்க்கின்றனர். படிக்கும் இடத்தில் தமிழ் இல்லை. குடிக்கும் இடத்தில் தமிழ் வைத்துள்ளார்கள். குடிப்பான்.. படிப்பான்..குடிப்பான்.. படிப்பான் என்று நம்மை அடிமைபடுத்தியுள்ளனர் என குற்றம்சாட்டினார்.

ரோடு ஷோ என பெயரில் தேர்தல் பிரச்சாரம்..அதில் எதுவும் பேசுவதில்லை.. ரோடு ஷோ என்ற பெயரில் மாடர்னா வந்து கையை ஆட்டிக்கொண்டு செல்கின்றனர். 19-ம் தேதி காங்கிரசுக்கு டாடா காட்டுங்க, தாமரைக்கும் டாடா காட்டுங்க. எப்ப பார்த்தாலும் சாம்பார் சாதமா…?

பழைய கை, பழைய தாமரை, பழைய சூரியன்.. இதை விட்டுங்க.. புதியது மைக். ப்ளீஸ் யூஸ் மைக் என்றார் சீமான். முதல்வர் ரங்கசாமி வரும் போது இன்னொரு காமராஜர் வருகிறார் என மகிழ்ந்தேன். ஆனால் சட்டை தான் பெரிது. சேட்டை தான் கொள்ளை சேட்டை என விமர்சித்த சீமான், இன்றும் தேர்தல் ஆணையம் பாஜக கட்சி அலுவலகம் போல இயங்குகிறது.

பறக்கும்படை ஒன்று உள்ளது. பணம் கொடுக்கிறார்கள் என்றால் இன்று அங்கு எங்களது டியூட்டி இல்லை. அது எங்கள் லிமிட் இல்லை என்கின்றனர் என குற்றம்சாட்டினார்.

முடிவில் மேடை ஏறி வந்த ஒரு தம்பதியர் தங்களது பிள்ளைக்கு பெயர் வைக்க கேட்ட போது குழந்தையை தூக்கி, “செந்தமிழ் சித்திரன்” என சீமான் பெயர் சூட்டி 500 ரூபாய் கொடுத்து புறப்பட்டார்..


Watch – YouTube Click

What do you think?

நம்ம சாமியார் ரங்கசாமிக்கு குடிதண்ணீர் பற்றி தெரியாது சாராயத்தை பற்றி மட்டுமே தெரியும்

தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்