in

நெய்வேலி என்எல்சி ராட்சத இயந்திரத்தால் போக்குவரத்து பாதிப்பு

நெய்வேலி என்எல்சி ராட்சத இயந்திரத்தால் போக்குவரத்து பாதிப்பு

 

நெய்வேலி என்எல்சி ராட்சத இயந்திரம் முக்கிய சாலையை கடந்தது போக்குவரத்து பாதிப்பு.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் முதல் சுரங்கம் முதல் சுரங்க விரிவாக்கம் இரண்டாவது சுரங்கம் என மூன்று திறந்த வெளி சுரங்கங்களில் ராட்சத இயந்திரங்கள் மூலம் நிலக்கரி வெட்டி எடுத்து மின் உற்பத்தி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் முதல் சுரங்கத்தில் இருந்த ராட்சத இயந்திரம் இரண்டாவது சுதந்திரத்திற்கு சுரங்க மேல் மண் நீக்கம் செய்வதற்கு ரயில்வே சாலை மற்றும் கடலூர் விருத்தாச்சலம் மற்றும் திருச்சி செல்லும் முக்கிய சாலை வழியாக சாலையை கடந்து இரண்டாவது சுரங்கத்திற்கு கொண்டு சென்றனர் .

இதனால் நெய்வேலி விருத்தாச்சலம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர் என்எல்சி நிர்வாகம் வருடத்திற்கு ஒருமுறை ராட்சத இயந்திரங்களை முதல் சுரங்கத்தில் இருந்து இரண்டாவது சுரங்கதிற்கு கொண்டு சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

குதிரை பேரத்தில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது.. வானதி சீனிவாசன் பேட்டி…

இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் என்எல்சி நிர்வாகம்