in

ஹைமாஸ் லைட் மாட்டியதை அரசு அதிகாரிகள் கழட்டி சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்


Watch – YouTube Click

ஹைமாஸ் லைட் மாட்டியதை அரசு அதிகாரிகள் கழட்டி சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்

 

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உயர் மின் கோபுரம் (ஹைமாஸ் லைட்) மாட்டியதை அரசு அதிகாரிகள் திரும்ப கழட்டி சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி மன்ற கூட்டத்தில் முக்கியமான பகுதிகளான முத்தாலம்மன் பஜார் பகுதி, நாடார் பஜார் பகுதி மற்றும் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில் உயர் மின் கோபுரம் அமைப்பதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இந்த மூன்று பகுதிகளில் உயர்மின் கோபுர இரும்பு தூண்கள் நிறுவப்படுவதற்கான கான்கிரீட் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு போடப்பட்டது.இந்த நிலையில் நேற்று வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதி மற்றும் யூனியன் அலுவலகம், நாடார் பஜார் பகுதியில் உயர்மின் கோபுரம் பொருத்தும் பணி நடைபெற்றது.

இதில் நாடார் பஜார் பகுதியில் உயர் மின் கோபுரம் பொருத்திய பின்னர் மீண்டும் பேரூராட்சி நிர்வாகம் நாடார் பஜார் பகுதியில் இருந்து பொருத்தப்பட்ட உயர்மின் கோபுரத்தினை வேறு இடத்திற்கு பொருத்துவதாக கூறி அதிகாரிகள் கழட்டி சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி செல்லும் சாலையில் சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பேரூராட்சி அதிகாரிகள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வர வேண்டும் அகற்றப்பட்ட உயர்மின் கோபுரத்துனை உடனடியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.

இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக அகற்றப்பட்ட உயர்மின் கோபுரத்தை அதே இடத்தில் பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்த பின்னர் பொதுமக்கள் சாலை மறியலில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். திடீரென பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

தனியார் பள்ளியில் நடைபெற்ற தாத்தா பாட்டியர் தினம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்