in

 பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார் ராகுல் காந்தி


Watch – YouTube Click

பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார் ராகுல் காந்தி

 

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை ஆகிய தொகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதற்காக மேடை அமைக்கும் பணி உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டில்

நாளை மாலை 4 மணிக்கு பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார் ராகுல் காந்தி வருகிறார் . பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையில் திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ், மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி, தென்காசி வேட்பாளர் ராணிஸ்ரீகுமார், மதுரை வேட்பாளர் வெங்கடேசன், விருதுநகர் வேட்பாளர் மாணிக் தாகூர், சிவகங்கை வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், கன்னியாகுமரி வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோரை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார்.

காங்கிரஸ் கட்சி கடல் போன்றது ! சிறுசிறு அலைகள் போல பிரச்சினைகள் ஏற்படலாம். ஆனால் பிரச்சனைகள் அனைத்தையும் பேசி தீர்த்து விட்டோம். ராகுல் காந்தி நாளை வரும் போது ரோட் ஷோ போன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசத்தில் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா கூட்டணி எழுச்சியோடு வெற்றிவாகை சுட போகிறது. அதன் முன்னோட்டமாக தான் நாளை மாலை நெல்லையில் பிரச்சார செய்ய இருக்கிறோம்.

நாளை நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் 40,000 பேர் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில், ஏழரை லட்சம் கோடி சி ஏ அறிக்கைக்கு மோடி வாயை திறக்கட்டும். ஒரு விரலை எங்களை பார்த்து மோடி நீட்டுகிறார் என்றால், மீத 4 விரல்கள் அவரைப் பார்த்து இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்.

நாங்குநேரி எம்எல்ஏ மீது புகார் கடிதம் அனுப்பப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்விக்கு, நேற்று இரவே பிரச்சினை பேசி முடிக்கப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது. எங்களுக்குள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பழனியில் அரசு பள்ளி ஊழியருக்கு பாலியல் தொல்லை

காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் தீவிர பரப்புரை. பெண்கள் பூசணிக்காய் சுற்றி உற்சாக வரவேற்பு.