in

வாக்காளர்களாகிய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


Watch – YouTube Click

வாக்காளர்களாகிய மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

 

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரியில், முதல் தலைமுறை வாக்காளர்களாகிய மாணவர்களின் வட்டாட்சியர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்றது.

ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி தலைவர் முனைவர் வி.முத்து முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் பூங்குயில் சிவகுமார் அனைவரையும் வரவேற்றார்.

ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ள தெள்ளாறில், தேர்தல் திருவிழாவில் 100 சதவீதம் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை பொதுமக்களுக்கு வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளர்களாகிய ராஜா நந்திவர்மன் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் அம்பேத்கர் சிலை அருகில் இருந்து புறப்பட்டு வாக்களிப்பது குறித்த முழக்கங்களை எழுப்பியவாறு தின்டிவனம் சாலை, பஜார் வீதி வழியாக கல்லூரி வளாகத்தை வந்தடைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் முனைவர் ஏழுமலை, துணை முதல்வர் காந்தி, தெள்ளாறு ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்த், பொன்னூர் காவல் ஆய்வாளர் பாலு, மண்டல துணை வட்டாட்சியர் மாரிமுத்து, முதன்மை வருவாய் ஆய்வாளர் சோமசுந்தரம்,வருவாய் ஆய்வாளர் ரஞ்சித் குமார், ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா. சீனிவாசன் மற்றும் மாணவர்கள் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கிராம வருவாய் ஆய்வாளர் மோகன் நன்றி கூறினார்.


Watch – YouTube Click

What do you think?

சிதம்பரம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா தேர்தல் பிரச்சாரம்

கோலகலமாக தொடங்கிய மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா