in

லால் சலாம் படத்தை திரையிட தடை ..கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. கடைசிநேர கடுகடுப்பு

லால் சலாம் படத்தை திரையிட தடை ..கமிஷனர் அலுவலகத்தில் புகார்.. கடைசிநேர கடுகடுப்பு

 

லால் சலாம் படத்திற்கு தடை. ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் படம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி உலக அளவில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் கேமியோ ரோலில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் விஷ்ணு விஷால், விக்ரம் ஆகியோர்கள் கதாநாயகர்களாகவும், தன்யா கிருஷ்ணன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்.

கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதையாநாளும், மதத்தை மையப்படுத்தி சொல்லும் விதத்தில் இக்கதை இயற்றபட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கௌரவ தோற்றத்தில் இப்படத்தில் நடக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்திற்கு குவைத்தில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதம் சம்பந்தப்பட்ட சர்ச்சையான கருத்துக்கள் இப்படத்தில் இடம் பெற்றிருப்பதால் அந்நாடு தடை விதித்து இருக்கிறது. ஏற்கனவே மம்முட்டி ஜோதிகா நடித்த ‘Kaathal – The Core’ என்ற படத்தையும் குவைத் நாட்டில் திரையிட தடை விதிக்கப்பட்டது.

மேலும் லால் சலாம் படத்தை தமிழகத்திலும் திரையிடக்கூடாது என்று கமிஷனர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

What do you think?

வீசிய மாலையை சூடிய விஜய்..புதுவை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட தளபதி

கிராமிய விருதை தட்டி சென்ற இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் இசை குழு..