in

 நெடுஞ்சாலையில் 50 ஆண்டு நாகமரம் பச்சை மரம், தீ பற்றி எரிந்தது


Watch – YouTube Click

 நெடுஞ்சாலையில் 50 ஆண்டு நாகமரம் பச்சை மரம், தீ பற்றி எரிந்தது

 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நத்தம் கிராமத்தில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் 50 ஆண்டு பழமையான நாகமரம் உள்ளது. இந்த மரம் திடீரென்று தீப்பற்றி எறிய தொடங்கியது

40 நிமிடம் காலதாமதமாக வந்த தீயணைப்பு படை வீரர்கள் இந்த தீயை அணைக்க முடியாமல் இரண்டு முறை தண்ணீர் தீர்ந்து விட்டது என்று தீயணைப்பு படை வண்டியை எடுத்துச் சென்று நான்கு மணி நேரம் போராடி தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு படை வீரர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது.

அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ஜேசிபி உதவியுடன் உள்ளாட்சி பிரதிநிதிகளை வைத்து சாலை ஓரமாக இருந்த மரக்கிளைகளை எரிந்து கொண்டிருந்த கிளைகளை அகற்றினார்கள்

தீயை அணைத்து மரக்கிளையை அகற்ற வேண்டிய தீயணைப்பு படை வீரர்கள் போதிய உபகரணங்கள் போதிய விளக்கு வசதிகள் தீயை அணைக்க வேண்டிய கெமிக்கல் போன்றவை தண்ணீரில் கலந்து தீயை அணைக்காமல் நான்கு வீரர்கள் மட்டுமே இருந்ததால் தீயணைப்பு படை அதிகாரி இல்லாததால் தீயணைப்பு படை வீரர்கள் மெத்தனமான முறையில் செயல்பட்டு இரவு பத்து முப்பது வரை தீயை அணைக்க முடியாமல் இவர்கள் முயற்சி கடும் தோல்வியில் முடிந்தது.

இதனால் இந்த பகுதியில் இருந்து வேலூர் சித்தூர் மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய பேருந்துகள் வாகனங்கள் அனைத்தும் கடும் போக்குவரத்து நெரிசலில் இந்த பகுதியில் சிக்கித் தவித்தது 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது சொற்ப அளவு போலீசார் போக்குவரத்து சரி செய்தனர்.

கடுமையான இருட்டு பகுதி என்பதால் இந்த பகுதியில் பச்சை மரம் எரிந்து கொண்டிருந்த பகுதியில் மின்சார வயர்கள் சென்றதால் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முடியாத இருந்த காரணத்தினால் மின்சார வயர்களுக்கு மின்சாரம் வழங்க முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் மெத்தனமான முறையில் செயல்பட்டதால் இந்த பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பச்சை மரத்திற்கு தீ வைத்த மர்மமானவர்கள் யார் அல்லது கடும் வெயில் காரணமாக தீ பற்றி எரிந்ததா போன்ற கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்…


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி உழவர்கரை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 309 ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றம்

பிச்சைக்காரனாக இருந்து மாஃபியாவாக உருவாகும் தனுஷ்’