in

பிச்சைக்காரனாக இருந்து மாஃபியாவாக உருவாகும் தனுஷ்’


Watch – YouTube Click

பிச்சைக்காரனாக இருந்து மாஃபியாவாக உருவாகும் தனுஷ்’

இயக்குனர் சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘குபேரா‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நேற்று வெளியானது தனுஷ் கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து குபேரா என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தன்னுடைய ஐம்பதாவது படமான ராயன் படத்தையும் தானே இயக்கி நடிக்கவும் உள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ராயன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

மேலும் தன்னுடைய அக்கா மகனை கதாநாயகனாகவும் அனிகா சுரேந்திரனை நாயகியாக வைத்து ஒரு படத்தை தனுஷி எடுக்க உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு இயக்குனர் சேகர் கமூலா இயக்கம் குபேர படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மற்றும் இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடிக்கிறார்.

இந்த’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது அதில் ஒரு பிச்சைக்காரர் அழுக்கு சட்டையும் கலைந்த தலைமுடியுமாக வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் வருகிறார்.

கட்டு கட்டாக லாரியில் பணம் அடுக்கி இருக்க அதன் அருகில் நாகார்ஜுனா ஒரு குடையுடன் நிற்கிறார். மழையில் 500 ரூபாய் நோட்டு ஒன்று மிதந்து தன் பக்கத்தில் வர தன் பாக்கெட்..டில் இருக்கும் 500 ரூபாய் நோட்டை எடுத்து அந்த கட்டுக்குள் வைக்கிறார்.

இப்படி புதிரோடு வெளியாகி இருக்கும் teaser மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் நிச்சயம் இந்த படம் தேசிய விருது பெறும் என்று தனுஷ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இப்படத்தில் நாகார்ஜூனா தனுஷூக்கு வில்லனாகவும், அரசு அதிகாரியாகவும், தனுஷ் பிச்சைக்காரனாக இருந்து மாஃபியா டானாக உருவாகிறார்.


Watch – YouTube Click

What do you think?

 நெடுஞ்சாலையில் 50 ஆண்டு நாகமரம் பச்சை மரம், தீ பற்றி எரிந்தது

Beauty Tips கொடுக்கும் நடிகை சாய் பல்லவி