in

வில்லியனூர் மாதா திருத்தலத்தின் 147வது ஆண்டு திருவிழா‌ கொடியேற்றம்


Watch – YouTube Click

வில்லியனூர் மாதா திருத்தலத்தின் 147வது ஆண்டு திருவிழா‌ கொடியேற்றம்

 

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் மாதா திருத்தலத்தின் 147வது ஆண்டு திருவிழா‌ இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

இதில்‌ தமிழகம் மற்றும்‌ புதுச்சேரியை சேர்ந்த‌ பக்தர்கள் திரளாக‌ கலந்து கொண்டனர்.

புதுச்சேரி அருகே உள்ள வில்லியனூரில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்திபெற்ற தூய லூர்தன்னை திருத்தலத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஈஸ்டர் பண்டிகை முடிந்த 6ம் நாளில் கொடியேற்றத்துடன் துவங்குவது வழக்கம். அதன்படி வில்லியனூர் தூய லூர்தன்னை திருத்தலத்தின் 147 வது ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றதுடன் துவங்கியது.

காலை 5.30 மணிக்கு அருள்நிறை ஆலயத்தில் நடைபெற்ற கூட்டு திருப்பலிக்கு பின்னர், மாதா உருவம் தாங்கிய திருக்கொடியானது பக்தர்கள் புடைசூழ மாதா திருக்குளத்தை சுற்றி பவனியாக கொண்டு செல்லப்பட்டது.

அதன் பின்னர், திருத்தல முற்றத்தில் உள்ள கொடிமரத்தில் புதுவை – கடலூர் உயர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் திருக்கொடியேற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். இதில் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து ஏப்ரல் 13ம் தேதி வரை திருவிழா நவநாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் திருப்பலிகள், தேர்பவனி நடைபெறுகிறது.ஏப்ரல் 14ம் தேதி திருத்தலத்தின் 147வது ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு திருப்பலி , அதனை தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு மாதாவுக்கு வைரகிரீடம் சூட்டப்பட்டு, பெருவிழா ஆடம்பர தேர்ப் பவனி நடைபெறவிருக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

சனி பிரதோஷம் சதுரகிரியில் குவிந்த ஏராளமான பக்தர்கள்

கச்சதீவு பற்றி பேசி பலனில்லை இலங்கை அமைச்சர்