in

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கடைகளை வைத்தால் 500 ரூபாய் அபராதம்


Watch – YouTube Click

போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கடைகளை வைத்தால் 500 ரூபாய் அபராதம்

 

புதுச்சேரி மதகடிப்பட்டு சந்தையில் ஆய்வு செய்த கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன் எச்சரிக்கை

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மதகடிப்பட்டு வாரச்சந்தை பிரெஞ்சு காலத்தில் இருந்து நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மாட்டுச் சந்தை செவ்வாய்க்கிழமை நடை பெறுவது வழக்கம்.

காலை 4:00 மணி முதல் காலை10 மணி வரை மாட்டுச் சந்தை நடைபெறும். அதன் பிறகு பத்து மணி முதல் இரவு 11 மணி வரை காய்கறி உள்ளிட்ட பல்வேறு கடைகள் இயங்கும்.

இந்த சந்தையில் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் பொருட்களை எடுத்து வந்து இங்கு விற்று வருகின்றனர்.

தற்போது சென்னை, நாகப்பட்டினம் நான்கு வழி சாலை மற்றும் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்தும் ஏற்பட்டு வருகிறது. ஆனால் சந்தைக்கு வரும் வியாபாரிகள் தங்களது வாகனங்களை சாலையில் விடுவதாலும் சாலையில் கடைகள் வைப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது இதனால் விபத்து ஏற்படுகிறது என்று புகார்கள் எழுந்தது.

இந்த நிலையில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் இன்று வாரச் சந்தையில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கடைகள் உள்பாக்கமாக அமைப்பதற்கு கோடுகள் அமைத்து கோடுகளுக்கு உள்ளே கடைகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனை மீறி சாலை ஓரங்களில் கடைகள் அமைத்தால் மற்றும் வாகனங்களை நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்தனர்.

அதைத்தொடர்ந்து, சந்தையின் பல்வேறு பகுதிகளை ஆணையர் எழில் ராஜன்ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் உடனிருந்தனர்.

இதுகுறித்து ஆணையர் எழில் ராஜன் கூறும் போது…

சாலை ஓரங்களில் கடைகள் அமைப்பதாலும் வாகனங்களை நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. தொடர்ந்து சாலையில் கடைகள் வைக்க வேண்டாம் என்று அறிவுத்திருக்கிறோம். இதை மீறி சாலை ஓரம் கடைகளை வைத்தால் கொம்யூன் பஞ்சாயத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும்
எச்சரித்தார்.


Watch – YouTube Click

What do you think?

லஞ்சம் பெற்ற தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது

புதுச்சேரி…60% பேருக்கு ஆஸ்துமா நோய் பற்றி தெரியவில்லை.. மருத்துவர்கள் கவலை…