in

400வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி வாக்குச்சாவடி முன்பு சாலை மறியல்


Watch – YouTube Click

மயிலாடுதுறை மகாதானத்தெருவில் டிபிடிஆர் பள்ளியில் அமைந்துள்ள 143 மற்றும் 144-வது வாக்குச்சாவடிகளில் 400 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் வாக்குச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில் பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் பங்கேற்று உள்ளனர்

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காலை ஏழு மணிக்கு வாக்கு பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 9 மணி நிலவரப்படி 10.24 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. மயிலாடுதுறை மகாதானத் தெருவில் 143 மற்றும் 144 வது வாக்குச்சாவடி மையத்தில் கடந்த தேர்தலில் 1189 வாக்குகள் இருந்த நிலையில் தற்போதைய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த பெரும்பாலான பொதுமக்கள் தங்களது பெயர் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் 644 வாக்குகள் மட்டுமே உள்ளதாகவும் 541 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக வாக்காளர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து வாக்குச்சாவடி முன்பு 20க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டமிட்டு தங்கள் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் அறிந்த பாமக வேட்பாளர் ம. க. ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். பொதுமக்களின் வாக்குகள் வேண்டுமென்றே நீக்கப்பட்டுள்ளதாகவும். வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வாக்குப்பதிவு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

வாக்களிக்க முடியாமல் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அதிர்ச்சி

102 வயது கூன்விழுந்த கிழவி ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினார்