in

ஆதீனம் மிரட்டல் வழக்கில் மும்பை சென்று கைது செய்த காவல்துறை


Watch – YouTube Click

ஆதீனம் மிரட்டல் வழக்கில் மும்பை சென்று கைது செய்த காவல்துறை

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுர ஆதின மடாதிபதியை ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் அகோரம் உள்ளிட்ட ஏழு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இதில் அகோரம் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அகோரத்தின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆதீனத்தின் உதவியாளர் செந்தில் திமுக ஒன்றிய செயலாளர் விஜயகுமார், வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் ஆகியோரை காவல்துறை கைது செய்யாத நிலையில், திமுக ஒன்றிய செயலாளர் மீது தவறு இல்லை என்று ஆதீனம் தரப்பில் காவல்துறைக்கு மறுப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு வழக்கில் இருந்து அவரை விடுவிக்க முடியாது என்பதால் காவல்துறை அவரை கைது செய்யவில்லை. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் அல்லது அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தமிழக அரசு வேண்டுமென்றே அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவரை இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும் முதல் தகவல் அறிக்கையில் பெயர் இடம் பெற்றுள்ள திமுக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்யாத காவல்துறை அகோரத்தை மும்பையில் சென்று கைது செய்துள்ளது.

திமுக ஒன்றிய செயலாளர் சுதந்திரமாக நடமாடி வரும் நிலையில் ஆதீனம் உதவியாளர் உள்ளிட்ட மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெறாத நிலையில் அவர்களையும் கைது செய்ய வேண்டும் அல்லது குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் வழங்கி இருந்து விடுவிக்க வேண்டும் இல்லையென்றால் மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் இந்து முன்னணி மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


Watch – YouTube Click

What do you think?

மயிலாடுதுறைல் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதி விவசாயிகள் சாலை மறியல்

பாஜக பிரமுகர் கட்டிய வீடு சப் கலெக்டர் தலைமையில் இடிக்கப்பட்டதால் பரபரப்பு