in

போளூரில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி


Watch – YouTube Click

போளூரில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி

 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாடாளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு போளூர் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு முன் நாம் என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் விவி பேட் இயந்திரத்தை சோதனை செய்து எவ்வாறு தயார் நிலையில் வைக்க வேண்டும் என்பதனைப் பற்றியும் கேட்டு அறிந்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களை செய்து காண்பிக்க சொல்லியும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் வாக்கினை அஞ்சல் மூலமாக செலுத்த அமைக்கப்பட்டு இருந்த மையத்தில் வாக்கினை செலுத்தினர்.

அஞ்சல் வாக்கு செலுத்துதலின் போது ஆரணி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமகிருஷ்ணன், போளூர் வட்டாட்சியர் வெங்கடேசன், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அமுல், சேத்துப்பட்டு வட்டாட்சியர் சசிகலா, துணை வட்டாட்சியர் சிவலிங்கம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா

திமுக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது வைகைச்செல்வன் பேச்சு