in

கணவருடன் வாழ்ந்து கொண்டே விதவை உதவி தொகை பெற்ற களவாணி மனைவி


Watch – YouTube Click

கணவருடன் வாழ்ந்து கொண்டே விதவை உதவி தொகை பெற்ற களவாணி மனைவி

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் கப்பூர் மேலே வீதி பகுதியைச் சேர்ந்தவர் திருமால் வயது 56. இவரது முதல் மனைவிக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு அவரது முதல் மனைவி பிரசவத்தின் போது இறந்து விட்ட நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டு பேரளம் உக்கடை பகுதியைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவரது மகளான முத்துலட்சுமியை முறைப்படி அவர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமாலுக்கும் முத்துலெட்சுமிக்கும் ஒரு மகள் உள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமாலின் மூத்த மகளின் திருமணத்தை திருமால் மற்றும் முத்துலட்சுமி இருவரும் இணைந்து செய்து  வைத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு முதல் மேலும் அந்த நல்லூர் கிராமத்தில் கணவன் மனைவி இருவரும் இணைந்து டீக்கடை நடத்தி வந்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு வரை கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த . முத்துலட்சுமி தாய் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறி சென்றவர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது.

திருமால் பலமுறை அவரை சென்று அழைத்தும் அவரது தந்தை அனுப்ப மறுத்ததால் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது இளைய மகளுடன் அ கப்பூரில் திருமால் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கப்பூரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க திருமால் சென்றபோது அவரது ரேஷன் கார்டு உக்கடை ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிந்ததையடுத்து அதிர்ச்சி அடைந்த இது குறித்து அடுத்த நாளே குடவாசல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் துறையில் இது குறித்து புகார் மனு அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த நாளே குடவாசல் வட்ட வழங்கல் துறை சார்பில் திருமாலை தொடர்பு கொண்டு தங்களது மனைவி 2020 ஆம் ஆண்டு முதல் மாதா மாதம் விதவை உதவித்தொகை வாங்கி வருவதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த திருமால் இது குறித்து குடவாசல் தாலுக்கா அலுவலகத்தில் 10.01.2024 அன்று புகார் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து பேரளம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். பேரளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு முத்துலட்சுமி ஒத்துழைக்கவில்லை என்று கூறியதையடுத்து திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக அவர் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் வந்திருந்தார்.

இது குறித்து திருமால் கூறும் போது நான் எந்த தொழிலும் செய்யாமல் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளை பார்த்துக் கொண்டு வீட்டில் இருப்பதாகவும் எனது பெயரில் எனது மனைவி இறப்புச் சான்றிதழ் வாங்கியதால் எனது குழந்தைகள் கூட என்னை ஒரு மாதிரி பார்ப்பதாகவும் வேதனை தெரிவித்தார். எனவே எனது இறப்புச் சான்றிதழை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.


Watch – YouTube Click

What do you think?

திமுகவை விமர்சித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை

காற்றாலை நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளை கைது