in

மகிழ்ச்சியை விட அமைதியாக வாழவே நான் விரும்புகிறேன் நடிகை ஓவியா Open Talk

மகிழ்ச்சியை விட அமைதியாக வாழவே நான் விரும்புகிறேன்…நடிகை ஓவியா Open Talk

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த ஓவியா.

அதற்கு பிறகு மெரினா, மதயானை கூட்டம், கலகலப்பு, சிலுக்குவார் பட்டி சிங்கம், களவாணி 2 , காஞ்சனா 2 போன்ற படங்களில் வரிசையாக நடித்தாலும் அவரால் ஹீட் கொடுக்க முடியவில்லை.

பிக் பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் ஓவியாவின் புகழ் வெளியில் பரவ ஆரம்பித்தது. அவர் பிக் பாஸ் இல் ஆடிய ஆட்டத்திற்கு ஓவிய ஆர்மி என்று பெயர் வைக்கும் அளவிற்கு ரசிகர் மனதில் ஒய்யாரமாக நடை போட்டார்.

பல எதிர்ப்புகளைத் தாண்டி சினிமாவில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஓவியா பிரபல நாளிதழுக்கு அண்மையில் பேட்டியளித்தார்.

அவரைப் பற்றிய சில துளிகள் இங்கே நிஜத்தில் நீங்கள் எப்படி என்று கேட்ட கேள்விக்கு பெருசா என்னை பற்றி சொல்லிக் கொள்கிற அளவிற்கு இல்லை நான் ரொம்ப சிம்பிளான ஆளு சிம்பிளா வாழனும்னு நினைக்கிற ஆளு அவ்வளவுதான் சினிமாவில் இருந்து நான் ஒதுங்கி விட்டேன் என்று சிலர் சொல்கிறார்கள் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் சில படங்கள் வெளி வருவதற்கு நீண்ட நாட்கள் ஆகிறது.

அதனால் கேரளாவில் என் குடும்பத்துடன் இருக்கிறேன். வேலை இருக்கும்போது தான் சென்னைக்கு வருகிறேன். அடுத்தடுத்த படம் நடிக்கணும்னு நினைக்கல நல்ல படமா இருந்தா மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

எப்பொழுதுமே சினிமாவை விட்டு நான் போக மாட்டேன் நான் நேசிக்கும் துறை இது இப்படி ஒரு சர்ச்சை ஏற்பட்டதுக்கு காரணம் நான் சில காலமாக குடிக்க அடிமையாகி விட்டேன் என்று சொல்கிறார்கள். அது எல்லாம் வெறும் கற்பனையே நான் கிறிஸ்மஸ் போன்ற பண்டிகைகளில் சிறிது ஒயின் எடுப்பேன் மற்றபடி குடித்துவிட்டு நான் எங்கேயும் விழுந்தது கிடையாது என் இமேஜ் காலிசெய்வதற்கு சிலர் அப்படி கட்டுக்கதை கட்டுகிறார்கள் என்றார்.

நீங்கள் காதலிப்பீர்களா என்று கேட்ட கேள்விக்கு நிச்சயம் … எனக்கு காதலில் நம்பிக்கை இருக்கிறது முதலில் உங்களை நீங்கள் நேசிக்க கற்றுக் கொண்டால் காதல் தன்னாக நம்மளை தேடி வரும். ஆள் வேணும் என்று நினைப்பது மட்டும் லவ் இல்லை காதலுக்கு நிறைய அர்த்தங்கள் இருக்கிறது பாஸ் மற்றபடி என் மனதில் இப்பொழுது யாரும் இல்லை நீங்களாக எதுவும் திரித்து கூறிவிடாதீர்கள். இப்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவில் இல்லை .

Happy Divorcers என்று சொல்ற ஆளுங்க மாதிரி நான் Happy Single. நான் ஜாலியா வாழ்ந்துட்டு இருக்கேன் வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களா நான் நினைப்பது.. அமைதியான வாழ்க்கையை தான், மகிழ்ச்சியை விட அமைதியாக வாழவே நான் விரும்புகிறேன் எல்லா வசதியும் இருந்தும் சிலரால் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ முடியவில்லை என்னை பொறுத்தவரை படுத்தால் நிம்மதியா தூங்கணும் மனசுல கவலை இல்லாம ஓடிக்கிட்டே இருக்கணும் அதுக்கு பெயர் தான் அமைதி அதனால் எனக்கு அமைதி தான் ரொம்ப முக்கியம் அதற்காக பணம் வாழ்க்கையில் முக்கியம் இல்லை என்று அர்த்தம் இல்லை .

தேவையான பணம் இல்லை என்றால் நம்மால் எதையும் சமாளிக்க முடியாது அதனால நமக்கு சந்தோஷமும் கிடையாது தேவையான பணமும் நிம்மதியான வாழ்க்கையும் நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இதுதான் என்னுடைய வாழ்க்கை Secret, நீங்களும் இதை பாலோ பண்ணுங்க பாஸ் என்று புன்னகையுடன் பேட்டியை முடித்தார்.

What do you think?

பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மற்றும் பாகுபலி வில்லன் மீது ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு

படித்ததில் பிடித்தது..பிடித்தால் பகிரவும்….மொழிந்தவர் ….திரு. இறையன்பு IAS அவர்கள்