in

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்


Watch – YouTube Click

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

 

இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மீன் பிடிக்கின்ற உரிமையும் பாதுகாக்க தவறிய பிரதமர் மோடி தமிழ்நாடு வருகையை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகப்பட்டினம் துறைமுகம் பகுதியில் உள்ள கடற்கரையில் மாவட்டத் தலைவர் அமிர்தராஜா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் வங்கக்கடலில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் பாரத பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கண்டன கோசங்களை எழுப்பினர்.

கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி தேசிய சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் மீரா உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி ஆசிரியர் இரண்டாவது நாளாக தொடர் ஆர்ப்பாட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை