in

மனு மூட்டையோடு ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி

மனு மூட்டையோடு ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி

 

8 ஆண்டுகளாக கொடுத்த மனுக்களின் மூட்டையோடு ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி; அதிகாரிகளின் அகந்தையால் அலைக் கழிக்கப்படுவதாக கண்ணீர்; தனது பட்டா இடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதராண்யம் வட்டம் வெள்ளப்ப்பள்ளம் வாணவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். மாற்றுத் திறனாளியான இவரது பட்டாவை அதே ஊரைச் சேர்ந்த தனிபர் ஆக்கிரமித்து அவரது பெயரில் பட்டா மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தனது பட்டா இடத்தை மீட்டுத்தருமாறு கிராம நிர்வாக அலுவலர், வட்டாச்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களுக்கு மனு அளித்துள்ளார். கடந்த 8 ஆண்டுகளாக கொடுத்து வரும் மனு மீதுஎந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று 8 ஆண்டுகளாக கொடுத்த மனுக்களை கட்டைபையில் போட்டு எடுத்து வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பாக கொட்டி வேதனையோடு கண்ணீர் வடித்தார்.

இது குறித்து அவர் கூறிய போது தனது மனைவி பெயரில் உள்ள பட்டா இடத்தை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் பட்டா மாற்றியதாகவும் இது குறித்து மனு கொடுத்தும் அதிகாரிகள் அவருக்கு சாதகமாக செய்யல்படுவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்ததால் எங்களை மீறி கலெக்டரிடம் மனு எப்படி கொடுத்தாய் என வீஏஓ முதல் வட்டாட்சியர் வரை இவரை அலைக்கழிப்பதாக வேதனை தெரிவித்து கண்ணீர் வடித்தார்.

தன்னுடைய பட்டா இடத்தை மீட்டுத்தர கோரிக்கை விடுத்த அவர் 3 ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதிகாரிகள் தன்னை அலைக்கழித்து சாகடிப்பதைவிட கருணை கொலை செய்து விடுங்கள் என புதிய மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமாரிடம் வழங்கினர்.

மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய இடத்தை மீட்டுத் தர கோரி கொடுத்த மனுக்களை மூட்டையாக எடுத்து வந்து ஆட்சியரிடம் தன்னை கருணை கொலை செய்துவிட சொல்லி மனு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

What do you think?

470 ஆண்டுகால நாகூர் கந்தூரி விழா சிறப்பு வர்ணஜாலம்

சாலையோர வியாபாரிகள் சாலை மறியல்