in

470 ஆண்டுகால நாகூர் கந்தூரி விழா சிறப்பு வர்ணஜாலம்

470 ஆண்டுகால நாகூர் கந்தூரி விழா சிறப்பு வர்ணஜாலம்

 

470 ஆண்டுகால நாகூர் கந்தூரி விழாவின் எட்டாம் நாள் சிறப்பு – வானில் வர்ணஜாலம் காட்டிய மத்தாப்பு இரவு

மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக விளங்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழாவின் எட்டாம் நாள் நிகழ்வான மத்தாப்பு இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில், முதல் நாள் புனித கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, அடுத்தடுத்த நாட்களில் திருக்குர்ஆன் ஓதுதல் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

இதில் எட்டாம் நாள் வாணவேடிக்கை நிகழ்ச்சிக்கு எனத் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தர்காவின் அலங்கார வாசல் முன்பு நடைபெற்ற மத்தாப்பு இரவில், வானில் சீறிப்பாய்ந்து வெடித்த வண்ண வண்ண வாணவேடிக்கைகள், மத்தாப்புகள், சங்கு சக்கரங்கள், ஈச்சமரம் என ஒளி விருந்து படைத்த பட்டாசுகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.

இரவு வானையே வண்ணமயமாக்கிய இந்தக் கண்கவர் நிகழ்ச்சியைக் காண நாகூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

470-வது ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், நாகூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.

What do you think?

“அரோகரா” கோஷம் அமைச்சர் ஷாஜகான் கருத்து

மனு மூட்டையோடு ஆட்சியர் அலுவலகம் வந்த மாற்றுத்திறனாளி