in

மாணவர்கள் மீது கண்டைனர் லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழப்பு


Watch – YouTube Click

தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கி கொண்டு கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மீது கண்டைனர் லாரி மோதியதில் நான்கு பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் தனியார் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த நான்கு கல்லூரி மாணவர்கள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மதுராந்தகம் மாலோலன் கலை அறிவியல் கல்லூரியில் ராமாபுரம், மோகல்வாடி ஆகிய கிராமங்களில் இருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

வழக்கம்போல் இன்று தனியார் பேருந்தில் கல்லூரிக்கு படிக்கட்டில் தொங்கியவாறு வந்து கொண்டிருந்த போது மாணவர்கள் பயணம் செய்த தனியார் பேருந்தை கண்டெய்னர் லாரி முந்த முயன்ற போது பேருந்தில் ஒரசியதில் மோனிஷ், கமலேஷ், தனுஷ் என்ற மூவரும் சம்பவ இடத்திலேயே பலி ரவிச்சந்திரனை மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலே ரவிச்சந்திரன் உயிர் இழந்தார்.

4 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஐந்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்துக்கு காலை பள்ளி கல்லூரி அலுவலக வேலை நேரத்தில் அரசு பேருந்துகள் போதுமான அளவு இல்லாத காரணத்தினாலும் அதிகப்படியான பயணிகளை கட்டணத்திற்காக ஏற்றி சென்ற தனியார் பேருந்தும் விபத்துக்கு காரணம் என இறந்த மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

இறந்த கல்லூரி மாணவர்களின் குடும்பங்கள் ஏழை குடும்பங்கள் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே இறந்த மாணவரின் பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.


Watch – YouTube Click

What do you think?

3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா

திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் பட்டா வழங்கும் விழா நடைபெற்றது..