in

நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு


Watch – YouTube Click

நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

 

நாகப்பட்டினத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழாவையொட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த இரு சக்கர பேரணியை மாவட்ட ஆட்சியர் வைத்தார்.

நாகப்பட்டினத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதன்படி கடந்த 15ஆம் தேதி முதல் இந்த மாதம் 14ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர பேரணி நடைபெற்றது.

பேரணியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் தொடங்கி ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர் சிங் கொடியாசைத்து துவக்கி வைத்தார் பேரணியில் காவலர்கள்,மகளிர் காவலர்கள், பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கிய பேரணி சுமார் 3 கிலோமீட்டர் தொலைவிற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

சாலைகளில் செல்லும் போது இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும், வாகன ஓட்டிகள் தங்களிடம் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் மது அருந்தி இருசக்கர வாகனம் இயக்கக் கூடாது நான்கு சக்கர வாகனம் ஓட்டும் பொழுது சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும், சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் போன்றவற்றை வலியுருத்தி சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்று சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருதரப்பினருக்கிடையே பரபரப்பு

இப்போதைக்கு அரசியல் பிரவேசம் இல்லை விஷால் பரபரப்பு அறிக்கை