in

உலக நாடுகளை உருக்குலைக்கும் பூகம்பம்


Watch – YouTube Click

உலக நாடுகளை உருக்குலைக்கும் பூகம்பம்

25 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஏப்ரல் 3 அன்று தைவான் தீவுநாட்டை உலுக்கியது. தைவான் நாட்டு தரவுகள் படி சுமார் 7.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடபட்டது. அடுத்த தினமே ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானை தொடர்ந்து தெற்கு சீனாவிலும் லேசான நிலநடுக்கம் உணரபட்டதாக கூறப்படுகிறது.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், இரண்டு இந்தியர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியானது. அந்த வகையில், தைவான் நிலநாடுக்கத்திற்கு மறுநாளே ஜப்பானில் சுமார் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. எனினும், சுனாமி எச்சரிக்கை கொடுக்கபடாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) இரவில் சுமார் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மியான்மர் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொடிருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் கூறபட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதிகளில் சுமார் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேப்போல, அமெரிக்காவின் நியூ யார்க் நகரிலும் சுமார் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது இருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கியுள்ளது. இதனை மக்களும் உணர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் நியூ யார்க் தமையாகத்தில் ஐக்கிய நாடுகள் சபை நடைபெற்று வந்தது. இந்த சபையில் காசா நாட்டின் நிலைமை குறித்த கூட்டம் நடைபெற்று வந்தது. நிலநடுக்கதிதினால் இந்த கூட்டமும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

மேலும், பிலடெல்பியாவிலிருந்து நியூ யார்க் வரை, கிழக்கு நோக்கி லாங் ஐலயந்த் வரையிலும் இந்த நிலநடுக்கம் உணரபட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் பலரும் அச்சமடைந்து உள்ளனர்.

அந்த வகையில், நியூ யார்க் நகரில் இருக்கும் இந்தியா தூதரகம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு பாதுகாப்பு உதவிகளையும் செய்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தினால் இந்தியர்கள் யாரும் காயப்படவில்லை எனவும் இந்தியா தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

மியான்மர், அமெரிக்கா மட்டுமல்லாது ஜப்பானிலும் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பான் நாட்டின் ஹோன்ஷூ நகரில் இன்று மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் அளவு 5.4 ரிக்டர் என பதிவாகி இருக்கிறது.

சமீபத்தின் இந்தியாவின் ஹிமாச்சல பிரதேச மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிபிடத்தக்கது. அந்த வகையில், தொடர்ந்து ஆட்டம்காட்டி வரும் இந்த நிலநடுக்கத்தினால் உலக நாடுகளே அலறி வருகிறது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் வீட்டில் தி மு க வேட்பாளரின் பணம் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை

சனி மகா பிரதோஷம் தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகம்