in

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரி… என் வீடியோவின் கீழ் ஏன் இப்படி கமெண்ட் போட்டீர்கள்…


Watch – YouTube Click

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரி… என் வீடியோவின் கீழ் ஏன் இப்படி கமெண்ட் போட்டீர்கள்…

 

நெட்டிசன்களை வருத்தெடுக்கும் பாடகி ராஜலட்சுமி நாட்டுப்புற கலைஞர்களான ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள்.

இவர் சமீபத்தில் வெளியான லைசன்ஸ் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாவில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

அதில் வெளிநாட்டில் ஒருவருடன் ஆங்கிலம் பேசுவது போன்ற வீடியோ, ஆனால் ரசிகர்கள் அதற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ் கொடுத்திருந்தனர், அதற்கு விளக்கம் கொடுத்த ராஜலக்ஷ்மி அவர்கள் Covid சமயத்தில் நிறைய வெளிநாடு நிகழ்ச்சிகள் பண்ண முடியாததால் தற்பொழுது அந்த பணியில் ஈடுபட்டு இருக்கின்றேன்.

நான் வெளிநாடு செல்வதற்கு ஆங்கில அறிவு தேவை, எப்படியாவது அந்த மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று தான் தற்போது கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன் நாம் அடுத்தவர்களிடம் பேசும் பொழுது தான் அந்த மொழியின் அறிவு நமக்கு வளரும் அப்பொழுதுதான் எந்த இடத்தில் நாம் தவறு செய்கிறோம் என்றும் புரியும் அதனால் தான் ஆங்கிலம் பேசுவது போல் இருக்கும் அந்த வீடியோவை நான் வெளியிட்டேன்.

ஆனால் அடிப்படை அறிவு கூட இல்லாதவங்க மட்டும்தான் இப்படி எல்லாம் என்னை விமர்சனம் பண்ணுவாங்க.

மேலும் நான் போட்டிருந்த உடையும் விமர்சனம் பண்ணியிருக்கிறாங்க அந்த வீடியோவின் கீழ் அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரி என்கிற வார்த்தை க்கும் நான் போட்ட பதிவுக்கு என்ன சம்பந்தம் என்று தான் எனக்கு தெரியவில்லை உடை என்கிறது எனது தனிப்பட்ட சுதந்திரம் எனக்கு எது போட்டா Comfortable… லா இருக்குதோ அதுதான் நான் போடுவேன் ஆனால் எல்லை மீற மாட்டேன் பொதுவாக பாடி ஷேமிங் அப்படிங்கிற கருத்தை நான் வெகுவாக எதிர்க்கிறேன்.

இந்த உடைக்கு இவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்ஸ் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனாலும் ஒரு சிலர் பாசிட்டி கமெண்ட்ஸும் கொடுத்து இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மகிழ்சியாக இருக்கிறது என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

தெறிக்க விடும் அரசியல் வசனத்துடன் ரெடி…யாகும் தளபதியின் அடுத்த படம்

விரைவில் மீண்டும் ஒரு ராமாயணம் உருவாகிறது