in

அருட்பிரகாச வள்ளலார் திருக்கோவிலின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழா


Watch – YouTube Click

செஞ்சி முல்லை நகரில் அமைந்துள்ளதிரு அருட்பிரகாச வள்ளலார் திருக்கோவிலின் 10 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி முல்லை நகரில் அமைந்துள்ள திரு அருட்பிரகாச வள்ளலார் திருக்கோவிலின் 10ஆம் ஆண்டு தொடக்க விழாவள்ளலார் வீதி உலா நிகழ்ச்சி கோவில் அறங்காவலர் சர்தார் சிங், தலைமையில் நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு ஜோதி வழிபாடும், சன்மார்க்க கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் வள்ளலார் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு சொற்பொழிவும், நடுப்பட்டு புருஷோத்தமனின் வில்லுப்பாட்டு நிகழ்ச்சியும், ஸ்ரீ சத்ய சாயி சேவா சம்மதியின் சர்வ மகா பஜனை நிகழ்ச்சியும், ஜோதி வில்லுப்பாட்டு குழு, வள்ளலார் கொள்கை நெறி பரப்பு இயக்கம் சார்பில்வள்ளலாரின்ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தொடர்ந்து திரு அருட்பிரகாச வள்ளலார் ஆலயத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு திருஅருள்பிரகாச வள்ளலாருக்கு தீபா ஆராதனை செய்து அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், அருட்பெருஞ்ஜோதி மன்ற நிர்வாகிகள், செஞ்சி வட்ட சன்மார்க்க சங்கத்தின் நிர்வாகிகள், பொதுமக்கள், விழா குழுவினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையைத் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்