in

200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்


Watch – YouTube Click

200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

 

பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து 200க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேஷ் தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துணை வட்டாட்சியர் பட்டியல் திருத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையினை உடன் வெளியிட்ட வேண்டும்

இளநிலை வருவாய் ஆய்வாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதி திருத்த ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் தனி ஊதியம் வழங்கிட வேண்டும், அனைத்து வட்டங்களிலும் சான்றிதழ் வழங்கும் பணிக்கான புதிய துணை வட்டாட்சியர் பணியிடங்களை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள பயன்பாட்டிற்கு தகுதியற்ற வாகனங்களை நீக்கம் செய்து அவற்றிற்கு ஈடாக புதிய வாகனங்களை உடனடியாக வழங்கிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள முழுமையான நிதி ஒதுக்கீட்டினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் 200க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கைக் குழந்தையுடன் கடமையை செய்த காவலர்

மதி சுடர் ஆயத்த ஆடை உற்பத்தி அலகு நிலையம்