in

அதிமுக நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

அதிமுக நிர்வாகிகள் வீதி, வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு

 

தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி வழிகாட்டுதலின்படி,

தென்காசி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராமச்சந்திரன் தலைமையில், புதுகாலனி பகுதி செயலாளர் வேம்பு என்ற ரவி முன்னிலையில் மற்றும் கழக நிர்வாகிகள் விஸ்வநாதபுரம் மற்றும் பெரியபிள்ளை வலசை உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், புதிய தமிழகம் கட்சி தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக கழக நிர்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில்.ஈடுப்பட்டனர்.

வாக்கு சேகரிப்பின் போது ஏராளமான பெண்கள் கையில் கழக கொடியை ஏந்தியபடி வீதி, வீதியாக சென்று பொதுமக்களிடம் அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை விளக்கி கூறி, துண்டு பிரசுரங்கள் வழங்கி, இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

தந்தை உங்களின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார் – மகள் தீவிர வாக்கு சேகரிப்பு

புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் பேச்சு