in

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்ஸ்ரீ நாகேஸ்வரன் கோவில் மகாகும்பாபிஷேக விழா


Watch – YouTube Click

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்ஸ்ரீ நாகேஸ்வரன் கோவில் மகாகும்பாபிஷேக விழா

 

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் வளாகத்தில் உள்ளே நாகமலை பகுதியின் அடிவாரத்தில் உள்ள ஸ்ரீ நாகேஸ்வரன்-நாகேஸ்வரி திருக்கோவிலில் நூதன ஜிர்னோத்தரண அஷ்டபந்தான மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை காண காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மூலஸ்தானத்தில் உள்ள லிங்க வடிவில் அமைந்துள்ள நாகேஸ்வரருக்கு மற்றும் கோவிலில் உள்ள பரிவார தெய்வங்களான விநாயகர், முருகன், நாகேஸ்வரி மற்றும் அம்மன் சிலைகளுக்கு யாகசாலையில் வைத்து பூஜைக்கு பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா கும்பாபிஷேகமானது நடைபெற்றது.

முன்னதாக முதல் கால யாக சாலைபூஜை நேற்று மாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் கலசத்திற்கு சிறப்பு பூஜையுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி பூரணாகதியுடன் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றது.

தொடர்ந்து புனித நீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவில் வளாகத்தை சுற்றி வந்து அருள்மிகு நாகேஸ்வரர் நாகேஸ்வரி திருக்கோவிலின் கோபுர கலசங்களுக்கு மேளதாளங்கள் முழங்க புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து, கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.


Watch – YouTube Click

What do you think?

அதிமுகவிற்கு ஆறு கோடி நிதி சிஎஸ்கே அணி வழங்கியது

மதுரை மாவட்ட மாஸ்டர் பிளான் திட்டம்