in

மதுரை மாவட்ட மாஸ்டர் பிளான் திட்டம்


Watch – YouTube Click

மதுரை மாவட்ட மாஸ்டர் பிளான் திட்டம்

 

மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு வரைவு முழுமை திட்டம் 2021- 2041  நிலவகைப்பாடு மாறி மாறி வரும் பட்சத்தில் தொழில் நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலை தொடர்ந்து நடத்துவதில் விரிவாக்கம் செய்வதில் அருகில் இருக்கும் குடியிருப்புகளும், விவசாயத் துறைகளுக்கும் பல தடைகள்வாய்ப்புள்ளது.

மதுரை மாவட்ட மக்களும், தொழில் முனைவோர்களும் இன்றைக்கு அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். மதுரை மாஸ்டர் பிளான் என்பது எதிர்கால மதுரையின் வளர்ச்சிக்காக இருக்க வேண்டும் தவிர மக்களுக்கு அச்சுறுத்ததாக இருக்கக் கூடாது.

நகர் ஊரமைப்பு திட்டத்தில் தற்போது நீக்கப்பட்ட சர்வே எண்களில் ஏற்கனவே தொழிற்சாலைகள் அமைந்துள்ளதா? என்று கண்டறியப்பட வேண்டும் ஏனெனில் ஏற்கனவே தொழிற்சாலை இருக்கும் பட்சத்தில் நில வகைப்பாடு மாற்றத்தினால், தொழிற்சாலைகள் தொடர்ந்து நடத்திட பல இன்னல்கள் ஆளாகும் நிலை தற்போது உருவாகி இருக்கிறது.

தொழிற்சாலை பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள கப்பலூர், நகரி மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் அதிகமான சர்வே எண்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

 சிக்கோ தொழில்பேட்டையாக கே புதூர் மற்றும் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட கப்பலூர்  தொழில்பேட்டையும், தனியார் தொழில் பேட்டையான உறங்கான்பட்டி மற்றும் வாடிப்பட்டி டெக்ஸ்டைல்ஸ் பார்க் வேற எந்த தொழிற்பேட்டைகளும் மதுரை மாவட்டத்தில் தற்போது இல்லை என்பது எல்லோருக்கும் அறிந்த ஒன்று..

ஏற்கனவே இருந்த தொழிற்சாலைக்கான நிலவகைபாட்டில் 85 கிராமங்களில் உள்ள 1576 அதிகமான சர்வே எண்களும், 17 கிராமங்களில் உள்ள மற்றும் 22 சர்வே எண்களும் நீக்கப்பட்டுள்ளதாகவும் நீக்கப்பட்ட சர்வே எண்களை கணக்கிட்டால் சுமார் 1678 ஏக்கர் நீக்கப்பட்டதாக உள்ளது.

நகர்ஊரமைப்பு வரைவு முழுமை திட்டத்தின் புதிதாக தொழிற்சாலை நிலவகைப்பாடாக அறிவிக்கப்பட்டதாக தெரியவில்லை இந்த நிலையில் வெளியிடப்பட்ட வரைவு (Draft) முழுமையாக செயல்படுத்தமேயானால்   தொழிற்சாலைகள், சிறுகுறு தொழிற்சாலைகள் மதுரை மாவட்டம் அமைவது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஏற்கனவே புரட்சி தலைவி அம்மா அவருடைய ஆட்சிக்காலத்திலே மதுரை -தூத்துக்குடி எக்கனாமிக் காலிடார் உருவாக்கப்பட்டது அது தற்போது அரசியல் கால்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மதுரை உள்ளூர் திட்ட குழுமம் அரசால் இணக்கமளிக்கப்பட்ட மதுரை மாஸ்டர் பிளான் திட்டத்தின் மீது வெளிப்படை தன்மையோடு கருத்துக்களை கலந்த ஆலோசித்து அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்துகொண்டு, மதுரை மாவட்ட மக்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும், வியாபாரவாசிகளுக்கும்,

விவசாயிகளுக்கும், தொழில் முதலீட்டாளர்களுக்கும், ஒட்டுமொத்தமாக மதுரை மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்கு உகந்ததாக நகர் ஊரமைப்பு வரைவு முழுமை திட்டம் 2021. 2041 உருவாக்க மாவட்ட ஆட்சியர், நகர் ஊரமைப்பு அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளார்களா என்பதை மதுரை மாவட்ட மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். இது வெளிப்படைத்தன்மையாக இல்லாமல் மறைமுக அச்சுறுத்தலாக மதுரை மாவட்டத்திற்கு மக்களுக்கு விடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை மதுரை வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கக்கூடிய கருத்துக்களை பரிசீலனை செய்து, அதை வடிவமாக கொடுத்து அதற்குப் பிறகு வெளியிடப்படுகின்ற போது அது முழுமையாக திட்டமாக அமையும் இல்லை என்று சொன்னால், அது வளர்ச்சிக்கான திட்டமாக இல்லாமல் அது நிச்சயமாக மக்களுக்கு வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துகிற ஒரு திட்டமாகத்தான் அது அமையும் தவிர ,அது எந்த விதத்திலும் வளர்ச்சிக்கான படிக்கல்லாக இருக்காது இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள் .

மதுரை மாவட்ட மக்கள் வளர்ச்சிக்கு படிக்கலாக இருக்க வேண்டுமே தவிர மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு தடைகற்களாக இது அமைந்துவிடக் கூடாது இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு விரிவான கடிதம் அனுப்பி உள்ளேன் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில்ஸ்ரீ நாகேஸ்வரன் கோவில் மகாகும்பாபிஷேக விழா

விவசாயிகளின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் – ஈசன் முருகசாமி ஆதரவு