in

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு


Watch – YouTube Click

ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

 

செங்கல்பட்டு அருகே ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையான குழந்தையின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு கீழடியை காட்டிலும் பழைமை வாய்ந்தது என தொல்லியல் துறை பேராசிரியர் தகவல்

சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்பில் செங்கல்பட்டு அருகே பாத்தூர் செட்டிமேடு பகுதியில், 24 நாட்களாக சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் டாக்டர். சௌந்தரராஜன் தலைமையில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில், நேற்று புதிய கற்காலத்தை சேர்ந்த 9-முதல் 11-வயதுள்ள குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. இந்த எலும்புக்கூடு தோராயமாக 5000 ஆண்டுகள் பழமையானது எனவும், தமிழ்நாட்டில் முதல் முதலாக முழு எலும்புக்கூடு கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்த பகுதி கீழடியை காட்டிலும், காலத்தால் முந்தியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து, இரும்பு மற்றும் சங்க காலத்தை சேர்ந்த கருப்பு-சிவப்பு மற்றும் கருப்பு நழுவப்பட்ட பாத்திரங்களின் பானை ஓடுகள், பண்டைய கீறல் உள்ள பானை ஓடுகள், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட காதணிகள், இரும்பால் செய்யப்பட்ட வில்லின் முனை உள்ளிட்ட பல்வேறு பழமையான பொருட்களை எடுத்துள்ளனர்.

சுமார் 1.86-மீட்டர் ஆழத்தில் பழங்கால பொருட்கள் கிடைக்கப்பெற்று உள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைக்கப் பெற்ற வருவதால் அகழ்வாராய்ச்சிப் பணிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இங்கு கிடைக்கப்பெற்ற எலும்புக்கூடுகளை டி.என்.ஏ பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

ஏழு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது

மோடி பாராட்டிய படத்திற்கு தடையா…. சர்ச்சையில் சிக்கிய பிரியாமணி படம்