in

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனியா பாலகிருஷ்ணனை

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனியா பாலகிருஷ்ணனை

 

கடந்த சில தினங்களாகவே தமிழர்களை அவமதித்த தனியா பாலகிருஷ்ணனை லால் சலாம் படத்தில் நடிக்க வைத்தது ஏன்? என்று சர்ச்சைகள் வெடித்தது. சர்ச்சைகள் வலுக்க தொடங்கியதால் சலாம் படத்திற்கு ரசிகர் மத்தியில் ஆதரவு குறைந்து விடுமோ என்ற பயத்தில் தனியா பாலகிருஷ்ணன் தற்பொழுது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதாவது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார் அந்த படத்தில் தனியா பாலகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் இவர் சில வருடங்களுக்கு முன்பு தண்ணீருக்காக எங்களிடம் பிச்சை கேட்கிறீர்களே என்று தமிழர்களை தரக்குறைவாக பேசி சமூக வலைத்தளத்தில் கருத்து ஒன்றை வெளியிட்டார். தற்பொழுது அந்த கருத்து தான் பூதகரமாக கிளம்பியுள்ளது .இந் நிலையில் நடிகை தன்னியா கூறியதாவது நான் தமிழர்களை இழிவு படுத்தியதாக பகிரகமாக சிலர் குற்றம் சாட்டியுள்ளார்கள் அந்த கருத்தை நான் கூறவில்லை நான் கூறியது போல வேறு யாரோ பதிவிட்டு இருக்கிறார்கள் அந்த ஸ்கிரீன் ஷாட் ஒரு ட்ரோல் யாரோ ஒரு நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது .நான் இத்தனை ஆண்டுகள் இதை பற்றி பேசாமல் அமைதியாக இருந்ததற்கு காரணம் அந்த சமயத்தில் என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டும் என் குடும்பத்தின் மீது அச்சுறுத்தலங்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது அதனால் என்னால் மறுப்பு தெரிவிக்க முடியவில்லை என் சினிமா பயணத்தை நான் தமிழில் தான் தொடங்கினேன் அதனால் கனவில் கூட தமிழர்களை அவமதிக்கும் விதமாக விளையாட்டுக்காக கூட நான் கருத்துக்களை வெளியிட மாட்டேன் இது எனது கருத்து இல்லை என்றாலும் துரதிஷ்டவசமாக என் பெயர் சம்பந்தப்பட்டதால் தமிழக மக்களிடம் முழு மனதாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இந்த சர்ச்சையால் மன உளைச்சலுக்கு உள்ளான ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். சிலரோ இத்தனை வருடம் அமைதியாக இருந்துவிட்டு எங்கே லால் சலாம் படம் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் பேசப்படாமல் போய்விடுமோ என்று பயத்தில் அறிக்கை வெளியிடுகிறாரோ அல்லது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் உந்துதலால் கருத்து தெரிவிக்கிறாரோ என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்

What do you think?

விஷாலுக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் சண்டை முற்றிய நிலையில்… ஆடிட்டரை நியமித்த நீதிமன்றம்

புதிய கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் தா மோ அன்பரசன்