in

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம்


Watch – YouTube Click

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம்

 

புதுச்சேரியில் 2023-24 ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த உழவர்களுக்கு உற்பத்தி மானியம் ஏக்கருக்கு 5 ஆயிரம் மானியம். முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரியில் வேளாண்துறை சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக உற்பத்தி மானியம் வழங்கப்படுகிறது.

அதன்படி, 2023-24 ஆம் ஆண்டு சொர்ணவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ 5,000 வீதம் 2,417 விவசாயிகளுக்கு 3,845.05 ஏக்கருக்கு 1,92,25,250- புதுச்சேரி பொதுப்பிரிவு உழவர்களுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

அதற்கான தொடக்க விழா சட்டமன்றத்தில் உள்ள முதலமைச்சர அலுவலகத்தில் நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆகிய கலந்து கொண்டு பயனாளிகளுக்கு காசோலைகளை வழங்கினர்…

புதுச்சேரி மற்றும் காரைக்கால் சேர்ந்த விவசாய கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நெற்பயிருக்கான இன்சூரன்ஸ் தொகையை வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்…


Watch – YouTube Click

What do you think?

தமிழக காவிரி கரையில் ஒலித்த ஆராதனை

மகாத்மா காந்தி நினைவு தினம் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர் தூவி மரியாதை