in

ஷூட்டிங் முக்கியம்..ன்னு அப்பாவின் இறப்பிற்கு கூட வராத கோவை சரளா


Watch – YouTube Click

ஷூட்டிங் முக்கியம்..ன்னு அப்பாவின் இறப்பிற்கு கூட வராத கோவை சரளா

தமிழ் சினிமாவில் நடிகை மனோரமாவுக்கு அடுத்து காமெடி நடிகையாக அன்றிலிருந்து இன்று வரை தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகை கோவை சரளா.

10-ம் வகுப்பு படிக்கும்போதே 1983 இல் முந்தானை முடிச்சு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார், 80களில் செந்தில், கௌண்டமணியுடன் ஜோடி போட்டு நடித்த அனைத்து காமெடி..யும் செம ஹிட் .

குறிப்பாக வடிவேலு கோவை சரளா காம்போ காமெடிகள் சர வெடி . துணை நடிகையா மட்டுமல்லாமல் சில படங்களில் ஹீரோயின் …னாகவும் நடித்துள்ளார்.

இதுவரை 750 படங்களுக்கு மேல் நடித்துள்ள கோவை சரளா சிறந்த நகைச்சுவை நடிகைக்காண பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.

இவர் அண்மையில் வெளியான அரண்மனை 4 என்ற படத்திலும் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன்… காக பல சேனல்களுக்கு பேட்டியளித்துள்ள கோவை சரளா அப்போது தன் வாழ்கையில் ஏற்பட்ட சோகமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் .

நான் கோயம்புத்தூரை சேர்ந்தவர் என்பதால் எனக்கு கோவை சரளா என்று பெயர் வந்தது எனக்கு நாலு சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருக்கின்றனர்.

என் வாழ்க்கையில் நடந்த ஒரு மோசமான சம்பவத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை .என் தந்தை இறக்கும் போது நான் ஊட்டியில் ஷூட்டிங்..கில் இருந்தேன். அப்போது என் தந்தை இறந்த செய்தி எனக்கு கிடைத்தது ஆனால் அந்த சமயத்தில் ஷூட்டிங் இருந்ததால் என் அப்பாவின் இறப்பிற்கு வர முடியவில்லை அது ரொம்ப சின்ன தயாரிப்பு நிறுவனம் நான் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டால் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஆகிவிடும் அதனால் ஷூட்டிங்கை விட்டு என்னால் அப்பாவின் இறப்புக்கு செல்ல முடியவில்லை.

ஆனால் யூனிட்டில்…லிருந்த எல்லோரும் என்னை தப்பாக நினைத்து பணத்துக்கும் புகழுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பெத்த தந்தையின் இறப்பு கூட செல்லாதவர் என்று என்னை மோசமாக பேசினார்கள்.

இன்று வரை எனக்கு மிகுந்த வேதனையை கொடுப்பது என் தந்தையின் இறப்பு. ஈடுகட்ட முடியாத இழப்பை உள்ளுக்குள் வைத்து கொண்டு எல்லோரையும் சிரிக்க வைக்கும் கோவை சரளாவு முதல்முறையாக கண்ணீருடன் பேட்டி அளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

புடவையில் வந்து அசத்திய நடிகை ஆலியா பட்

CWC சீசன் 5 contestant…களின் சம்பள விவரம்