in

புதுச்சேரியில் கூரை வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருட்டு!

புதுச்சேரியில் கூரை வீட்டில் 8 சவரன் தங்க நகைகள் திருட்டு!

புதுச்சேரி, துத்திப்பட்டு இந்திரா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (44), தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் குடும்பப் பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோரிடம் இருந்து பிரிந்து, புதுக்குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இதனால் துத்திப்பட்டில் உள்ள அவரது கூரை வீட்டில் நகைகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் மட்டும் அவரது தந்தை பத்மநாபன் அங்கு சென்று தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இரவு பத்மநாபன் வீட்டிற்குச் செல்லவில்லை.மறுநாள் வழக்கம்போல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்ததுடன், அலமாரியும் திறக்கப்பட்டிருந்தது.

அதிலிருந்த 8 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடுபோன நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூரை வீடு என நினைக்காமல் அங்கும் திருட்டு கும்பல் தனது கைவரிசையை காட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

தஞ்சை பல்கலைக்கழகத்தில் தீபாவளி கலை விழா

ஏழைகளுக்கு புத்தாடை வழங்க உள்ள சமூக சேவகர்