in

மாநில அளவிலான 4-வது ஆண்டு கராத்தே, சிலம்பம் போட்டி

மாநில அளவிலான 4-வது ஆண்டு கராத்தே, சிலம்பம் போட்டி

 

புதுச்சேரியில் மாநில அளவிலான 4-வது ஆண்டு கராத்தே, சிலம்பம் போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

புதுச்சேரி அசோக் கராத்தே சங்கம் மற்றும் புதுச்சேரி அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்கம் இணைந்து நடத்தும் 4-வது ஆண்டு மாநில அளவிலான கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகள், லாஸ்பேட்டையில் உள்ள ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாகத் தொடங்கின.

இதன் தொடக்க விழாவில், காலாப்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் @ ரமேஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.

இப்போட்டிகளில் புதுச்சேரி தமிழ்நாடு ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது தற்காப்புக் கலைத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

கராத்தே மற்றும் பாரம்பரிய சிலம்பக் கலையின் சிறப்புகளை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுடன், மாணவர்களின் தன்னம்பிக்கை, உடல் வலிமை மற்றும் தற்காப்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்குப் பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி அசோக் கராத்தே சங்கம் மற்றும் புதுச்சேரி அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க நிர்வாகிகள் சிறப்பாகச் செய்துள்ளனர்.

What do you think?

தண்டு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நவராத்திரி விழா – ஊஞ்சல் உற்சவம்

சந்தைப்பேட்டை புதூர் ஆலய மகா கும்பாபிஷேக விழா