பூஜாரிகள் பெயர் அமைப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
பல்வேறு கிராமங்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் சிதலமடைந்து கிடைக்கும் கோவில்களை புணரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜாரிகள் பெயர் அமைப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…..
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை மாவட்ட பூஜாரிகள் அமைப்பு சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பூஜாரிகள் அமைப்பினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.

குறிப்பாக அந்தந்த மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை நிர்வாகத்தில் உள்ள பெரிய கோவில்களின் வருவாயிலிருந்து அந்த மாவட்டத்தில் இருக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற திருக்கோவில்களுக்கு தீபம் ஏற்றவும் நெய்வேத்திய பொருட்கள் மற்றும் வஸ்திரங்கள் வாங்க பூஜை பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், பல கிராமங்களில் 12 ஆண்டுகளுக்கு மேல் கும்பாபிஷேகம் செய்யப்படாமல் சிதலமடைந்து கிடக்கும் திருக்கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 60 வயது நிறைந்த பூஜாரிகளுக்கு ஓய்வூதிய திட்டம் மற்றும் 60 வயதுக்குட்பட்ட பூஜாரிகள் நலவாரிய திட்டத்தில் சேர்வதற்கு ஆண்டு வருவாய் 72,000 சான்று வழங்க வேண்டும் எனவும், சிறு வயது முதல் வயோதிகம் வரை வாழ்நாள் முழுவதும் எந்தவித பணப்பயணம் இல்லாமல் திருக்கோவில்லையே நம்பி ஏழ்மையுடன் வாழும் பூஜாரிகளுக்கு ஓய்வூதியம் தற்போது நான்காயிரம் அறிவிக்கப்பட்டு உள்ளது என்றும், அதை 5,000 உயர்த்தி வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆரம்ஸ கோரிக்கைகளை வலியுறுத்தி பூசாரிகள் அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூஜாரிகள் அமைப்பினர் கோரிக்கை மனுவை அளித்தனர்.


