in

கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…..

பஞ்ச மூர்த்திகளின் மரத்தேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை…..

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா உலக பிரசித்தி பெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 15 ம் தேதி அண்ணாமலையார் கோவில் கருவறை எதிரே உள்ள 64 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

அனுதினமும் காலை மற்றும் இரவு வேலைகளில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கிய நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெள்ளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதால் அண்ணாமலையார் கோவில் வளாகம் மற்றும் கோவில் அருகே நிறுத்தப்பட்டுள்ள பஞ்ச மூர்த்திகளின் மரத்தேர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What do you think?

தமிழக அரசு கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி